ஒரு பெண் ஆடைகளினால் மறைக்க வேண்டிய பகுதிகளில் தலை முடியும் அடங்கும். இதை இஸ்லாம் மார்க்கம் மாத்திரம் சொல்லவில்லை. கிறிஸ்தவம் மற்றும் இந்து சமயங்களும் போதிக்கின்ற பெண்களின் கண்ணிய உடைக்கலாசாரம் இது தான்.
கிறிஸ்தவ ‘கண்ணியாஸ்திரிகள்’ அணியும் ஆடையென்பது முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவுக்கு நிகரானது. அதே போல் தான், இந்து சமயத்தின் பிறப்பிடமான வட இந்தியாவில் இன்றளவும் பெண்கள் தலையை மறைத்து முக்காடு இட்டுத்தான் உடை அணிகின்றனர். இதற்கு இந்திய முன்னாள் ஜனாதிபதி ‘பிரதீபா பட்டேல்’ ஒரு சிறந்த உதாரணமாகும்.
தற்போது பெண்களில் பெரும்பாண்மையானவர்கள் அணியும் நவீன உடைக்கலாசாரங்கள் மதங்கள் கற்றுக் கொடுத்தவையல்ல. மாறாக, வயிற்றுப் பிளைப்புக்காக பெண்களை வைத்து கூத்தாடும் சினிமாக்காரர்கள் ஏற்படுத்தி கொடுத்தது. இவ்வுடைக் கலாசாரத்தினால் பாதிக்கப்படுவதும் பெண்கள் தான்.
பெண் சுதந்திரம் என்ற பெயரில் இன்று பெண்களின் ஆடைக்குறைப்பினை ஊக்குவிக்கும் பல கயவர்கள் சமூக மட்டத்தில் பல இடங்களில் உலா வருகின்றனர். ஆனால், ஒழுக்கத்தைப் போதிக்கக்கூடியவொரு பாடசாலை அதுவும் ஒரு பெண் அதிபரைக் கொண்ட பாடசாலை நிர்வாகம் இவ்வளவு கீழ்த்தரமான வன்மத்தைக் கொண்டிருப்பது பாடசாலையில் கற்பிக்கப்படும் ஒழுக்க விழுமியங்கள் மற்றும் அதன் உள் விவகாரங்களில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
ஏனைய மதங்களுடன் ஒப்பிடுகையில், இந்து மதம் பாலியல் சம்பந்தமான விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை மறுக்க முடியாது. அவர்களின் கோயில் சிற்பங்கள், பண்டிகைகள் உருவாகிய பின்புலங்கள், லிங்கம் போன்ற வழிபாட்டுச்சின்னங்கள் போன்றவை இவற்றுக்கு சிறந்த உதாரணங்களாகும். ஆனால், அவை பற்றி ஏனைய சமயத்தவர்கள் விமர்சனம் செய்ய முடியாது. காரணம் அதற்குரிய தத்துவங்கள் என்ன? என்பதை இந்து மதத்தைப் படித்தவர்கள் தான் அறிவார்கள்.
இஸ்லாமிய மார்க்கமும் ‘நீங்கள் ஏனையவர்களின் கடவுள்களைத் திட்டாதீர்கள். அவ்வாறு நீங்கள் திட்டினால் அவர்கள் அல்லாஹ்வை வரம்பு மீறித்திட்டுவார்கள்.’ என்று ஏனையவர்களின் கடவுள்களை விமர்சிப்பதைத்தடை செய்கின்றது.
இந்திய சினிமாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் ஆடைக்கலாசாரமானது, பெண்களுக்குரிய பாதுகாப்பினையும் கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சினிமா மோகம் பிடித்த இளம் பெண்கள் ஆடைகள் விசயத்தில் மாத்திரமல்ல, தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் விடயத்திலும் உடல் ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் விரயம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
காமசூத்திராவிற்கு அங்கீகாரம் கொடுத்த சினிமாவுக்கும், அந்த சினிமாவே கெதியென்று கிடக்கும் ஒரு சமுகத்திற்கும் பெண்களின் கண்ணியம் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டிய தேவையில்லையென்பது உண்மை தான். ஆனால், அவர்கள் சீரழிந்த கலாசாரத்தை அடுத்தவர்கள் மீது திணிப்பதென்ன வகையில் நியாயம்?
குறிப்பிட்ட சில காலத்திற்கு முன்புவரை நமது நாட்டில் குட்டைப்பாவாடை அணிவது விபச்சாரிகளின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அனேகமானவர்கள் சர்வ சாதாரணமாக அணிகின்றனர். பகலில் கூந்தலுக்கு மல்லிகைப் பூ வைத்தால் குடும்பப்பெண் என்றும் அதே மல்லிகைப்பூவை இரவில் வைத்துச்சென்றால், அவள் விபச்சாரி என்றும் இன்றளவிலும் தமிழ் நாட்டில் சில இடங்களில் பெண்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
இவையனைத்தையுமே கற்றுக் கொடுத்தது சினிமாவே தவிர, மதங்களல்ல. கடந்த சில வருடங்களுக்கு முன் புதுடில்லியில் ஒரு இளம் பெண் ஓடும் பஸ்ஸில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ‘இவ்வாறான சம்பவங்களுக்கு பெண்களின் ஆடையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. இஸ்லாமிய பெண்கள் உடுத்தும் அபாயாவானது பெண்களுக்கு கண்ணியத்தைக் கொடுக்கின்றது’ என்று இந்துக்களின் புனிதத்தலமாகக் கருதப்படும் மதுரை ஆதீனத்தின் தலைவர் ‘அருணகிரி நாதர்’ சொல்லியிருந்தார்.
அதே போல், பாபர் மசூதியை இடிப்பதற்கு காரணமாயிருந்த ‘அத்வாணி’ கூட அரபு நாட்டு குற்றவியல் சட்டங்கள் இந்தியாவில் பின்பற்றப்பட வேண்டுமென்று கூறியிருந்தார். இந்து மதத்தைப்படித்தவர்கள் இவ்வாறு இஸ்லாத்தைப்பற்றி விளங்கியிருக்கும் போது, இந்து மதத்தைப்பாதுகாக்கின்றோம் என்று கிளம்பியிருக்கும் அரைவேக்காட்டு இனவாதிகளும் அதற்கு துணை போகும் பாடசாலை நிர்வாகமும் மிகவும் கண்டிக்கத்தக்கவர்கள்.
சண்முகா வித்தியாலயம் இருக்கும் அதே இடத்தில் தான் கோணேஷ்வரா கோயிலும் இருக்கின்றது. அதற்கு வரும் பார்வையாளர்களில் அபாயா போட்ட பெண்களும் பௌத்த மதத்தைச்சார்ந்த பெண்களும் வருகின்றனர். ஏன் அவர்களையெல்லாம் உங்கள் கலாசார? உடை அணிந்து வரச்சொல்வதில்லை.? கோவிலுக்குரிய வருமானம் பாதிக்கப்படும். வருமானம் கிடைக்குமானால் கலாசாரத்தை விட்டுக்கொடுக்க முடியுமென்பது இந்து மத பாதுகாவலர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் இனவாதிகளின் கொள்கையா?
இன்று அமெரிக்கா, ஐரோப்பிய தேசங்களில் குறிப்பாக பெண்கள் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை நன்கு விளங்கிக்கொண்டும் இஸ்லாம் பெண்களுக்கு கொடுக்கும் கண்ணியத்தை நன்குணர்ந்து கொண்டும் அதன் பால் விரைந்து வருவதற்கு இஸ்லாமிய பிரசாரகர்களை விட இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் தான் காரணம்.
ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடசாலையிலேயே கவர்ச்சியான ஆடையுடன் வந்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தால் அவர்கள் பாடம் படிப்பார்களா? அல்லது பாலியலின் பக்கம் திசை திருப்பப்படுவார்களா? என்பதைக்கூடப் புரிந்து கொள்ள முடியாத அதிபரும் அதனோடு தொடர்புபட்டவர்களும் சிந்தனையற்றிருப்பது கவலை தரக்கூடிய விடயமாகும்.
இன்றைய இளம் சமுதாயத்தினர் சீரழிந்து சின்னா பின்னமாகிப் போவதற்கு பெண்களின் அரைகுறை கவர்ச்சி ஆடைகள் தான் காரணமென்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதல்ல. அண்மைக்கால சம்பவங்களே இதற்கு நல்ல உதாரணங்களாகும்.
உடலினை வெளிக்காட்டும் பெண்களின் கவர்ச்சி ஆடையினால் கவரப்பட்டு வக்கிரப்புத்திக்கு உள்ளாக்கட்டவர்களினாலேயே வித்யா, சீமா, சேயா, ஆசிபா போன்ற இளஞ்சிறுமிகள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை இப்போது எல்லோரும் உணரத்தொடங்கியிருக்கிறார்கள்.
சண்முகா வித்தியாலயத்தில் நடந்த பிரச்சினை ஆடை விடயத்தில் மட்டும் சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்க வேண்டுமென்ற இனவாதிகளின் செயற்பாடாகவே தெரிகிறது.
அத்தோடு, தமிழ் தலைவர்கள் வாய் பொத்தி மௌனிகளாக இருப்பதும் இப்போது இரா. சம்பந்தன் அவர்கள் முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை கட்டினால் பிரச்சினை தீர்ந்து விடுமென்று பொறுப்பற்ற விதத்தில் கருத்துத் தெரிவித்திருப்பதும் முஸ்லிம்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்திருக்கிறது.
சாரி கட்டுவது தான் தமிழ் கலாசாரமென்றால், அதனை யாரும் மறுக்க முடியாது. மறுக்கவும் கூடாது. அது அவர்களது சுதந்திரம். ஆனால், பண்டைய காலத்து பெண்கள் கட்டியது போலா இப்போது பெண்கள் சாரி கட்டுகிறார்களா? என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அதை அடுத்தவர்கள் மீது திணிப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எப்படி இந்து மதப்பெண்களுக்கு சாரி கட்டுவதற்கு உரிமை இருக்கிறதோ, அவ்வாறே முஸ்லிம் பெண்களுக்கு அவர்களது கலாசாரத்திற்கேற்ப அபாயா அணிவதற்கு உரிமை இருக்கிறதென்பதையும் அந்த அதிபரும் அவரோடு கைகோத்துள்ளவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
சண்முகா வித்தியாலயமென்பது இந்துக்களின் கோவிலல்ல. அது அரசாங்கப் பாடசாலை பாடசாலைக்கு கற்பிக்க வருகின்ற ஆசிரியர்கள் ஒழுக்கமான கௌரவமான ஆடைகளை அணிந்து வர வேண்டுமென்பதே அரசாங்க அறிவுறுத்தலாகும். அதனையே அந்த ஆசிரியைகளும் செய்திருக்கிறார்கள். இதனைப் பொதுப் புத்தியுள்ள எவரும் மறுக்கமாட்டார்கள்.
பர்தா அணிந்து வந்த ஆசிரியை மாணவர்களுக்கு பர்தா பற்றி பாடம் நடத்தவில்லையென்பதை ஏற்றுக் கொள்ளும் அதிபரும் அதனோடு, தொடர்புடையவர்களும் வேறு ஒரு நிரலின் கீழ் செயற்படுகிறார்கள் என்பதும் தெட்டத் தெளிவாகின்றது.
No comments:
Post a Comment