ஜே.வி.பி கட்சியானது, சிறுபான்மை மக்களது பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினையும் இணைத்து தமது 20ம் திருத்தச் சட்ட மூலத்தில் முன்வைக்குமாக இருந்தால், அதற்கு ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் யாப்புக்கு 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான யோசனையை, ஜே.வி.பி எதிர்வரும் எட்டாம் திகதிக்குப் பின்னர் முன்வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால் இதற்கு ஆதரவளிக்க வேண்டுமாக இருந்தால், இனப்பிரச்சினைக்கான தீர்வும் ஏக சமயத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் கூறியுள்ளார்.
1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறையினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதனை நீக்குவதாக தற்போதைய ஜனாதிபதி கடந்த தேர்தல் காலத்தில் கூறி இருந்தார்.
எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது குறித்து அவதானம் செலுத்தப்படும் அதே அளவுக்கு, தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment