அம்பாரைக் கலவரம் சம்பந்தமான குரல்கள் இயக்கத்தின் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 6, 2018

அம்பாரைக் கலவரம் சம்பந்தமான குரல்கள் இயக்கத்தின் கலந்துரையாடல்

70 நாட்கள் கடந்த பிறகும் அம்பாரை இனவெறிக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களிற்கான நஷ்டஈட்டினை வழங்குவதிலும் வழக்குகளை துரிதப்படுத்தி 21 பேர் தவிர்ந்த ஏனையவர்களை கைது செய்ய வைப்பதிலும் அரச இயந்திரத்தினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் அசமந்த போக்குகள் தொடர்ந்து நீடித்து வருகின்றமை யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் வியூகங்களை வகுப்பதற்கான கலந்துரையாடலொன்றை குரல்கள் இயக்கம் கடந்த 2018.05.04 ஆம் திகதி இரவு நிந்தவூர் பெரிய ஜும்ஆப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் அம்பாறை பள்ளிவாயல் பிரதிநிதிகள், பாதிக்கபட்ட கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் குரல்கள் இயக்கத்தின் (Voices Movemnt) பிரதிநிதிகள் (சட்டத்தரணிகள் மற்றும் துறைசார் நிபுணர்களுட்பட்ட) என பலரும் கலந்து கொண்டதனர்.

1) 06 மணித்தியாலயங்களுக்கு மேலாக எரியூட்டப்பட்ட அம்பாறை பள்ளிவாயலின் தளமானது தொடர் பாவனைக்கு பொருத்தமற்றது என துறைசார் நிபுணர்கள் எழுத்து மூலமாக அறிக்கையளித்திருக்கும் நிலையில் முழுப்பள்ளிவாயலையும் அகற்றி புதுக்கட்டிடத்தை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதற்கான மொத்த செலவினம் ரூபா 45 மில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அரச அதிபரும் சில அதிகாரிகளும் மேலோட்டமான வெளி பாதிப்பினை மட்டுமே கருத்திலெடுத்து வெறும் 3.6 மில்லியன் ரூபாவோடு இவ்விடயத்தினை கைகழுவி விட முயற்சிக்கின்றனர். முழுப்பெறுமதிக்கான முன்மொழிவினை அமைச்சரவையில் சமர்ப்பிக்க இயலுமான அழுத்தங்களை பிரயோகித்தல்.

2) அம்பாறை வழக்குகளில் பிரதான சாட்சிகளாகவுள்ள நபர்களில் பெரும்பாலானோர் தேவையான ஒத்துழைப்புக்களை எமது சட்டத்தரணிகளுக்கு தராமல் இன்றுவரை ஒதுங்கி வருவதனால் வழக்குகளை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை நிவர்த்திக்க முறையான தொடர்பாடல் முறைமையை உருவாக்க இணக்கம் காணப்பட்டது.

3) சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் 05 கடைகளினது சொத்துக்களின் மொத்த பெறுமதி சுமார் 4.9 மில்லியன் என்ற விடயத்தை முறையான அரச மதீப்பிட்டின் உதவியோடு நிர்ணயிப்பதற்கான முன்னெடுப்புக்களை செய்ய வேண்டிய தேவையுள்ளமை.

4) வழக்குகளின் பிரதான சான்றுகளான தடயப் பொருட்கள் நீதிமன்றிலிந்து மீட்டு எடுக்கின்ற பொறிமுறையை வழக்குகளிற்கு பாதகம் வராத நிலையில் செயற்படுத்த இணக்கம் காணப்பட்டது.

No comments:

Post a Comment