பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்துக்கு உட்பட்ட குவெட்டா பகுதியில் ஒரு நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 30 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இவ்விபத்தின் பலி எண்ணிக்கை இன்று 23 ஆக உயர்ந்தது.
சுரங்கத்தின் உள்ளே ஏற்பட்ட மீத்தேன் வாயு கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் வெடிப்பு சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுவதாக கூறப்படுகிறது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததே இந்த விபத்துக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment