நேற்றிரவு விடுக்கப்பட்ட மண்சரிவு மட்டும் கற்பாறைகள் உருண்டு விழுதல் ஆகிய அனர்த்தங்கள் தொடர்பான எச்சரிக்கை தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அமுலிலிருக்கும்.
கடும் மழையையடுத்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் நேற்றிரவு விடுக்கப்பட்ட அனர்த்தங்கள் தொடர்பான எச்சரிக்கை தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அமுலிலிருக்கும்.
இரத்தினபுரி,கேகாலை,நுவரெலியா,களுத்துறை காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து நடைமுறையிலிருக்கும் என்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத்த, குருவிட்ட, எஹெலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் கேகாலை மாவட்டத்தின் புலத்கோபிட்டிய, தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல, அரநாயக்க, மாவனல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்.
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுகள் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்த நுவர, அகலவத்த, புலத்சிங்கள, இங்கிரிய, வலளாவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நாகொட, நெலுவ, தவலம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment