சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடை இன்னும் ஒரு மாதத்தில் நீக்கப்படவுள்ள நிலையில், அங்கு மேலும் மூன்று பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி கோரும் இயக்கத்தைச் சேர்ந்த பல பெண் செயற்பாட்டாளர் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘துரோகிகள்’ என்றும், வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து பணியாற்றுபவர்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
இந்நிலையில் அண்மைய தினங்களில் கைது செய்யப்பட்ட பெண் உரிமையாளர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. இதில் ஏழு பெண்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011 தொடக்கம் கிட்டத்தட்ட 30 செயற்பாட்டாளர்கள் மீது சவூதி நீதிமன்றங்கள் குற்றங்காணப்பட்டிருப்பதோடு இவர்கள் மீது 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment