வெனிசுவேலா மீது அமெரிக்கா விதித்திருக்கும் புதிய தடைகளுக்கு பதிலடியாக அமெரிக்காவின் இரு இராஜதந்திரிகளை வெளியேறும்படி வெனிசுவேலா ஜனாதிபதி நிகலஸ் மடுரோ உத்தரவிட்டுள்ளார்.
மடுரோ தனது இரண்டாவது தவணைக்கு வெற்றிபெற்ற ஜனாதிபதி தேர்தலை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளும் முறையற்றது என குற்றம்சாட்டியுள்ளன.
இதனைக் கண்டித்தே வெனிசுவேலா தனது அரச சொத்துகளை விற்கும் திறனை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா புதிய தடையை கொண்டுவந்தது. இந்நிலையில் அமெரிக்க இராஜதந்திரியான டொட் ரொபின்சன், ‘இராணுவ சதி ஒன்றில்’ ஈடுபட்டதாகவும் அவருடன் மற்றொரு இராஜதந்திரியான பிரையன் நரன்ஜோவையும் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி மடுரோ கடந்த செவ்வாயன்று உத்தரவிட்டார்.
அவர் இந்த சதி தொடர்பில் ஆதாரங்களை வெளியிடாதபோதும் அமெரிக்க தூதரகம் இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்களில் தலையிட்டதற்கான ஆதாரங்களை முன் வைப்பதாக உறுதி அளித்துள்ளார்.
No comments:
Post a Comment