இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும்படி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) வழக்கறிஞர்களிடம் பலஸ்தீன் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆக்கிரமிப்பு பலஸ்தீன பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்களின் ஆதாரங்களின் விபரத்தை பலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் மாலிக்கு சமர்ப்பித்துள்ளார்.
இதன்மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2015இல் ஆரம்பித்த ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்கு அப்பால் இதனை முன்னெடுக்கும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலிக்கியின் நடவடிக்கையை நிராகரித்திருக்கும் இஸ்ரேல், இதனை ‘சட்டபூர்வமற்ற இழிந்த செயல்’ என்று சாடியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் காசாவை பிரிக்கும் எல்லை பகுதியில் கடந்த ஆறு வாரங்களாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதும் இஸ்ரேல் துருப்புகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 10,000 பேர் வரை காயமடைந்த நிலையிலேயே பலஸ்தீன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழங்கறிஞர் பதூ பென்சவுதாவை ஹேகில் சந்தித்த பின் உரையாற்றிய மாலிகி, 2014 ஜுன் தொடக்கம் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலம் மற்றும் காசாவில் இடம்பெற்ற அனைத்து குற்றச்செயல்கள் குறித்தும் தாமதமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment