வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தனது கட்சியின் முக்கியஸ்தர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 24, 2018

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தனது கட்சியின் முக்கியஸ்தர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்தவரை உதவுமாறு அகில மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள மழை, வெள்ள அனர்த்தம் மற்றும் சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல பாகங்களிலும் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் வீடு வாசல்களை இழந்தும் பரிதவிக்கின்றனர். இவர்களுக்கு முடிந்தவரை தனவந்தர்களும் வசதிபடைத்தவர்களும் உதவிக்கரம் நீட்டுமாறு அவர் வேண்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் புனித ரமழான் மாதத்தில் நோன்புக் கடமைக்கான வசதிகளை மேற்கொள்ளுமாறும் தங்களால் இயன்றவரை எந்தவிதமான பாகுபாடுமின்றி அனைத்து இனங்களுக்கும் உதவி செய்யுமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment