வலிகாமம் வடக்கு பிரதேச சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ள நிலையில், தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற பிரதேச சபையின் முதல் அமர்வில் தவிசாளர் தெரிவு இடம்பெற்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சோ. சுகிர்தனும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தாயுமானவன் நிகேதனும் தவிசாளர் பதவிக்காக பிரேரிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் சோ. சுகிர்தனுக்கு 20 வாக்குகளும், தா. நிகேதனுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன. ஈ.பி.டி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி என்பன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரை ஆதரித்த அதேவேளை, ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர் ஒருவர் சபை அமர்வில் பங்கேற்காத நிலையில, தமிழர் விடுதலைக் கூட்டணி நடுநிலை வகித்தது.
இதனையடுத்து, உப தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த பொன்னம்பலம் இராஜேந்திரம் தெரிவு செய்யப்பட்டார். வலி. வடக்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 17 ஆசனங்களையும், ஈபிடிபி 8 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா 2 ஆசனங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment