எகிப்து நாட்டின் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சுமார் 97 சதவிகித வாக்குகள் பெற்ற அப்துல் சிசி மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எகிப்து நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான ஓட்டு பதிவு கடந்த திங்கட்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் அப்துல் சிசி மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மவுசா முஸ்தபா போட்டியிட்டார்.
முதல் 2 நாள் நடந்த தேர்தலில் ஓட்டு பதிவு மிக குறைவாக இருந்தது. இதனால் ஓட்டு போடாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தேர்தல் துறை அறிவித்தது. ஆனாலும், ஓட்டு பதிவு அதிகமாக நடக்கவில்லை. ஓட்டு பதிவு குறைவாக இருந்தால் தற்போதைய அதிபருக்கு தோல்வி ஏற்படலாம் என கருதினார்கள்.
எனவே, அதிபர் தரப்பில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதே போல் எதிர்க்கட்சிகளும் பணம் கொடுத்தன. ஆனாலும் கூட ஓட்டு பதிவு தொடர்ந்து மந்தமாகவே இருந்தது.
இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. முடிவில் தற்போதைய அதிபர் அப்துல் சிசி பதிவான வாக்குகளில் சுமார் 97 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் வருகிற 2022-ம் ஆண்டு வரை அவர் எகிப்து நாட்டின் அதிபர் பதவியில் நீடிப்பார்.
No comments:
Post a Comment