இலங்கையில் பாரம்பரியமாக இடதுசாரிக்கொள்கையுடையவரும்,
மகிந்தவின் நண்பரும், முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் சம்மந்தியுமான திரு வாசுதேவ நாணயக்கார, நேற்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.
யாழ் சென்ற இடதுசாரி வாசுதேவ நாணயக்கார தனது சம்மந்தியை சந்தித்துவிட்டு,சம்மந்தி சகிதம் நல்லூர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
நல்லூர் கோவிலுக்கு சென்ற வாசுதேவ நாணயக்கார, தன்னால் மேற்சட்டையின்றி கோவிலுக்குள் செல்லமுடியாது என்றும், தான் மேற்சட்டையுடன்தான் கோவிலுக்குள் செல்வேன் என அடம்பிடித்து, நல்லூர் கோவிலில் நிர்வாகத்துடன் முரண்பட்டுள்ளார்,
ஆனாலும் அவரை நல்லூர் கோவில் நிர்வாகம் மேற்சட்டையுடன் கோவிலுக்குள் இறுதிவரை அனுமதிக்கவில்லை. இதனால் வெளியில் நின்றவாறே நல்லூர் கோவிலை வணங்கிவிட்டு திரும்பிவிட்டார்.
No comments:
Post a Comment