அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் உறுதிமொழி வழங்கியதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் அழைப்பின் பெயரில் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது குறித்த விடையம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், தற்பொழுது சிறையில் உள்ள பலருக்கு விடுதலை வழங்கப்படும் அதேவேளை ஏனையோர் ஒரு குறுகிய புனர்வாழ்விற்குப் பின்னர் விடுவிக்கப்படுவர் என உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவினர்கள் சாலை போராட்டத்தில் அரசாங்கத்தின் பாராமுகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலக பணிகள், வடக்கு-கிழக்க்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரிக்கப்படும் காணிகள் தொடர்பில் தெளிவு படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக்கள், மாகாண சபையில் சிங்கள உத்தியோகஸ்தர்களுக்கு பதிலாக இளைஞர் யுவதிகளை நியமிப்பது தொடர்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், இதனை பிரதமர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
சுமார் அரைமணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரனும் அதன் செயலாளரான வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment