ஐ. நா. சபையின் சிறுவர் உரிமைகள் சாசனம் தொடர்பாக அறிவுறுத்தும் நிகழ்ச்சித் திட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 2, 2018

ஐ. நா. சபையின் சிறுவர் உரிமைகள் சாசனம் தொடர்பாக அறிவுறுத்தும் நிகழ்ச்சித் திட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சாசனம் தொடர்பாக அறிவுறுத்தும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆரம்பித்துள்ளது. 

பாடசாலை மாணவர்கள் இதனை புரிந்துகொள்ளும் வகையில் மாணவர்கள் மத்தியில் தெளிவுபடுத்தும் நோக்கில் சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் இலகு முறையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான நிகழ்ச்சித் திட்டத்தை மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் ஒத்துழைப்புடன் அதன் முதலாவது நிகழ்ச்சித் திட்டம் மேல் மாகாண பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும். நாட்டில் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அது குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கும். 

அவ்வாறான சம்பவங்கள் பற்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கோ அல்லது 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு அதிகார சபை பொதுமக்களை கேட்டுள்ளது.

No comments:

Post a Comment