ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 30 தலிபான்கள் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, April 2, 2018

ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 30 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். குந்தூஸ் பகுதியில் தலிபான் அமைப்பினர் முகாமில் இன்று அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் தலிபான் அமைப்பினரின் முகாம் மீது ராணுவ விமானங்கள் குண்டு வீசியுள்ளன. இதில் 30 தலிபான் அமைப்பினர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் 
‘‘ஆப்கானிஸ்தான் ராணுவம் தலிபான் அமைப்பினருக்கு எதிராக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது அப்பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 30 தலிபான்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை”, என அவர் கூறினார்.

ஆனால் இந்த தாக்குதல் அப்பகுதியில் செயல்பட்டு வந்த மத நல்லிணக்க பள்ளி மீது நடத்தப்பட்டதாகவும், அதில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் தலிபான் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment