ஆடை உற்பத்தி தொழிற்சா லைக்கு யுவதிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று வீதியோ ரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறியுடன் மோதிவிபத்துக்குள்ளானதில் சுமார் 35 யுவதிகள் காயமடைந்து சிலாபம் ஆஸ்பத்திரியில் நேற்றுக்காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி நுரைச்சோலை பகுதியிலிருந்து சுமார் 40 யுவதிகளை பிங்கிரிய வித்துவ பகுதியிலுள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலைக்கு ஏற்றிவந்த போது ஆரச்சிக்கட்டுவ, ஹெலம்பவட்டவனப் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தேங்காய் ஏற்றிவந்த லொறியொன்று இயந்திரக் கோளாறு காரணமாக வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் வேகமாக வந்த ஆடை உற்பத்தி நிறுவன பஸ் வண்டி லொறியின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் பஸ்சுக்குள் பயணித்த சுமார் 40 பேரில் 35 யுவதிகள் காயங்களுக்குள்ளாகினர். வீதியில் வந்த லொறிகள், வான்கள் மூலம் உடனடியாக சிலாபம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். லொறிச் சாரதியும், பஸ் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment