தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை தெற்கு மடக்கும்புர தோட்டத்தில் மரக்கறி தோட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தோட்டத்தில் மரக்கறி விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் அங்கு மிருகங்களிடம் இருந்து பயிரை பாதுகாக்கவென குறித்த நபரால் சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி மேற்படி நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment