தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க வேண்டும்

வவுனியா வடக்கு பிரதேச சபையில் சிங்கள கட்சிகள் ஆட்சியமைக்க இடமளிக்க கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வவுனியா வடக்கில் அதிக படியான ஆசனங்கள் பெற்றிருக்கும் நிலையில் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு மற்றைய தமிழ் தேசிய கட்சிகள் உதவவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் விடுத்திருந்த கோரிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அங்கீகரித்துள்ளதுடன், தமிழ் கட்சி ஆட்சியமைக்க ஒத்துழைப்பு வழங்குவோம் என கூறியுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையில் 12 ஆசனங்கள் பெற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியமைப்பதற்கு முயற்சிக்கின்றது.

இதேவேளை 8 ஆசனங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தலா 3 ஆசனங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் 3 தமிழ் கட்சிகளும் இணையாவிட்டால் சிங்கள கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் தமிழ் கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment