கொழும்பில் ஆறு கொலைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நிலை நாட்டில் ஏன் ஏற்படுகின்றது? - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

கொழும்பில் ஆறு கொலைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நிலை நாட்டில் ஏன் ஏற்படுகின்றது?

கடந்த இரண்டு, மூன்று தினங்களில் கொழும்பில் மாத்திரம் இதுவரை ஆறு கொலைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நிலை நாட்டில் ஏன் ஏற்படுகின்றது? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் பாதாள உலகக் குழுவினரின் நடவக்கைகளை கட்டுப்படுத்த முடிந்திருந்தாகவும் ஆனால் தற்போது பாதாள உலகக் குழுவினரின் அட்டகாசங்களை இந்த அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

பிலியந்தலை பகுதியில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடுகளின் மூலம் கொலை செய்யப்படுகின்றனமை தொடர்பான செய்திகளே ஊடகங்கள் வாயிலாக தற்போது கேட்க முடிகின்றது. கடந்த இரண்டு, மூன்று தினங்களில் கொழும்பில் மாத்திரம் இது போன்ற ஆறு கொலைகள் இடம்பெற்றுள்ளன.

இவற்றுக்கு யார் மீது குற்றம் சுமத்தவது என்றும், இவற்றை யாரால் நிறுத்த முடியும் என்று தமக்குத் தெரியவில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதாள உலகக் குழுவினரை கட்டுப்படுத்தி, போதைப் பொருளில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கவும் தமக்கு முடிந்திருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment