60 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோய்னுடன் மூன்று சந்தேகநபர்கள் கொழும்பு தெமட்டகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து, 503 கிராம் 160 மில்லிகிராம் ஹெரோய்ன் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் 55 வயதான பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மட்டக்குளி மற்றும் மொறட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி, தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கான உத்தரவை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment