40 ரூபாய்க்கு பாண் கேட்டு தகராரில் ஈடுபட்ட ஆறு இளைஞர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, March 1, 2018

40 ரூபாய்க்கு பாண் கேட்டு தகராரில் ஈடுபட்ட ஆறு இளைஞர்கள் கைது

திருகோணமலை அனுராதபுர சந்தி பேக்கரியொன்றில் 40 ரூபாய்க்கு பாண் கேட்டு தகராரில் ஈடுபட்ட ஆறு இளைஞர்களை நேற்றிரவு (28) உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, காந்திநகர் பகுதியைச்சேர்ந்த 21, 22 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

அனுராதபுர சந்தியிலுள்ள அஸீஸ் பேக்கரியில் போதையுடன் வருகை தந்த இளைஞர்கள் 40 ரூபாயை பேக்கரி உரிமையாளரிடம் கொடுத்து ஒரு இறாத்தல் பாண் தருமாறும் பாணின் விலை 60 ரூபாய் என கூறிய போது தகராரில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்முறைப்பாட்டையடுத்து தகராரில் ஈடுபட்ட ஆறு இளைஞர்களையும் கைது செய்துள்ளதாகவும் இன்றைய தினம் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்தவுள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

அப்துல்சலாம் யாசீம்

No comments:

Post a Comment