தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் 39 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் 39 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

தேசிய வீடமைப்பு அதிகாரசபை இன்று தனது 39 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் தலைமையில் 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அமைக்கப்பட்டது.

வரையறுக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு அரச அனுசரணையுடன் வீட்டு வசதிகளை வழங்குவதற்கு பதிலாக அனைத்து இலங்கை மக்களுக்கும் வாழக்கூடிய பொருத்தமான வீடுகளை வழங்குவதற்காக இந்த அதிகாரசபை அமைக்கப்பட்டது.

இந்த அதிகாரசபை அமைக்கப்பட்டதையடுத்து 1979ஆம் ஆண்டு முதலாவது கம்முதாவ என்ற வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டு தொடக்கம் 1983 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரசபையினால் முடிந்தது.

2015 ஆம் ஆண்டு முதல் கடந்த 3 வருட காலப்பகுதியில் விடமைப்பு நி;மாணத்துநை அமைச்சர் சஜித் பிரேமதாச முன்னெடுத்த அனைவருக்கும் நிழல் என்ற தேசிய வேலைத் திட்டத்திற்கு அடிப்படையாக தேசிய வீடமைப்பு அதிகாரசபை விளங்கி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

தேசிய அதிகாரசபையின் கீழ் இதுவரையில் 610 மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் 50 கிராமங்கள் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 வருட காலப்பகுதியில் நாடு முழுவதிலும், சுமார் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு வீட்டு வசதிகளை செய்து கொடுப்பதற்கு அதிகாரசபையினால் முடிந்துள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் 39 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட முக்கிய வைபவம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

அனுராதபுரம் - பளுகஸ்வெள என்ற இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 31 ஆவது மாதிரிக் கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் அன்றைய தினம் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. 39 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மத வழிப்பாட்டு நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. 

இந்த வார காலப்பகுதியில் இதுவரை காலம் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து கிராமிய மற்றும் நகர திட்டங்களை சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 2020ஆம் ஆண்டளவில் நாடு முழுவதிலும் இரண்டாயிரத்து 500 கிராமங்களை அமைப்பதே அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நோக்கமாகும்.

இது தொடர்பான உறுதிமொழியை நிறைவேற்றும் பொறுப்பை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஏற்றிருப்பதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் லக் விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment