வாக்காளர் அட்டையில் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அவற்றை திருத்திக்கொள்க - News View

About Us

About Us

Breaking

Monday, February 5, 2018

வாக்காளர் அட்டையில் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அவற்றை திருத்திக்கொள்க

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அவற்றை திருத்திக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் உடனடியாக திருத்தம் செய்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களை கேட்டுள்ளார்.

பெயர், ஆண், பெண் பாலினம் முதலான குறைபாடுகளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரின் செயலகத்திற்கு சென்று திருத்தம் செய்து கொள்ள முடியும் என்று ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment