வட மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகவும், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம் எதிர்வரும் 15 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் சுமார் பத்தாண்டு காலம் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிய 182 பேருக்கும், அதற்கு சமமான காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 142 ஆசிரியர்களுக்கும் இவ்வாறு நியமனம் வழங்கப்படுகிறது.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இந்த நியமனத்திற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையில் பெற்றுக்கொண்டார். வட மாகாண கல்வி அமைச்சரும் இதுதொடர்பான விடயத்தில் ஆர்வம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment