தலைநகரின் நிர்வாக மத்தியநிலையமாக கடுவல மாநகரத்தை மேம்படுத்த நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, February 5, 2018

தலைநகரின் நிர்வாக மத்தியநிலையமாக கடுவல மாநகரத்தை மேம்படுத்த நடவடிக்கை

தலைநகரின் நிர்வாக மத்திய நிலையமாக கடுவல மாநகர எல்லைப்பிரதேசம் புதிய நகரமாக மேம்படுத்துவதற்கான திட்டம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தலைமையில் புதிய நகரத்திற்கான திட்ட வரைபு இன்று வெளியிடப்பட்டது.

அலுவலக கட்டடத்தொகுதி, வர்த்தக கட்டடத்தொகுதி, முறையான வீதிக்கடமைப்பு, பூங்கா உள்ளிட்ட பல பிரிவுகளை கொண்டதாக புதிய நகரம் அமைக்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு ஒன்றிணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான வெளியீட்டு நிகழ்வில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment