மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய பாதுகாப்பு படைத்தளபதி நியமனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 4, 2018

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய பாதுகாப்பு படைத்தளபதி நியமனம்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய பாதுகாப்பு படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சத்தயபிரிய லியனஹே பதவியேற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மதவழிபாடுகளின் பின்னர் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய பாதுகாப்பு படைத் தளபதியவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. மேஜர் ஜெனரல் சத்திய பிரிய லியனஹே காரியாலயகத்துக்கு வருகை தந்து பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக மங்கள விளக்கேற்றி தமது அதிகார பூர்வ கையொப்பத்தையிட்டு கடமைப் பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு படைத் தளபதியவர்களினால் தலைமையகத்தின் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. நிகழ்வில் தமது கடமையை பொறுப்பேற்ற புதிய கட்டளை தளபதி படையினர்களிடம்; எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

No comments:

Post a Comment