வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றுக்குட்பட்ட வன பாதுகாப்பு பிரதேசங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டி பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்த தடையை மீறுவோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கமைவாக பயன்படுத்தப்பட்ட பின்னர் வீசப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் பொதிகள், பொலித்தீனுடன் பொதி செய்யப்பட்ட உணவு முதலானவை பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்கா, உலக மரபுரிமை, வனப் பாதுகாப்பு பகுதிகள் ஆகிய இடங்களுக்கு எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment