கல்வியியற் கல்லூரி மாணவர்கள் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

கல்வியியற் கல்லூரி மாணவர்கள் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை

கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை மார்ச் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காகவே மாணவர்கள் கல்வியில் கல்லூரிக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக மாவட்ட அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். இம்முறை மாவட்ட மட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க சுமார் மூன்று மடங்கினர் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களின் தகுதிக்கு அமைவாக தேசிய கல்வியற் கல்லூரியில் நேர்முகப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள 19 கல்வியில் கல்லூரிகளுக்கு 27 கற்கைநெறிகளுக்காக 4ஆயிரத்து 745 பேர் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment