பொன் மனச்செம்மல் MGR அவர்களின் நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள “புகழ் மணச்செம்மல் எம்.ஜி.ஆர்“ எனும் புரட்சி தலைவரின் வாழ்க்கை வரலாற்று நூலில் என் தந்தை மர்ஹூம் இலங்கை நெய்னார் பற்றியும் அவருக்கும் MGR க்குமான நெருங்கிய தொடர்பு பற்றியும் பதியப்பட்டுள்ளது.
என் தந்தை மறைந்து 14 ஆண்டுகள் கடந்தும் அவர் ஆற்றிய சேவைகள் இந்தியாவிலிருந்து வெளியாகிய புத்தகத்தில் வெளிவந்திருப்பதை எண்ணி அவரின் மகன் என்ற வகையில் நான் பெருமிதம் அடைகிறேன்.
இப் புத்தகத்தை வாசிக்கும் போது நாம் MGR அவர்களின் வரலாற்றை மட்டுமல்ல மனிதனாக பிறந்த ஒருவர் ஏழைகளுக்கு வாரி வழங்குவதன் மூலம் வள்ளலாக மாற முடியும் என்பதை படிப்பினையாக எடுத்து கொள்ள முடியும்.
இப் புத்தகத்தை எழுதிய மரியாதைக்குரிய திரு Manavai Pon Manickam மணவை பொன் மாணிக்கம் அவர்களுக்கும் எனக்காக தமிழிகத்தில் இருந்து பல புத்தகங்களை சுமந்து வந்த தம்பி கவிஞர் பொத்துவில் Asmin Uthumalebbe அவர்களுக்கும் பலகோடி நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.
அத்துடன் இப்புத்தகத்தின் அறிமுக விழா மிக பிரமாண்டமாய் விரைவில் இலங்கையிலும் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.
நன்றி
Ilangai Nainar Social Trust.
No comments:
Post a Comment