மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அமைந்துள்ள ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு கடையில் பற்றிய தீ பின்பு அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 5 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். தீ விபத்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதி புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இந்த தீ விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment