இராணுவ பொறியியலாளர்கள் படைத் தலைமையகத்தின் யுத்த உபகரணத்தின் புதிய மாஸ்டர் ஜெனரல் பதவியேற்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 6, 2018

இராணுவ பொறியியலாளர்கள் படைத் தலைமையகத்தின் யுத்த உபகரணத்தின் புதிய மாஸ்டர் ஜெனரல் பதவியேற்பு

இலங்கை இராணுவ பொறியியலாளர்கள் படைத் தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் ஜகத் குனவர்தன யுத்த உபகரணத்தின் புதிய மாஸ்டர் ஜெனரலாக பதவியேற்றுள்ளார்.

இராணுவ தலைமையக காரியாலயத்தில் மகா சங்கத்தின் பௌத்த மத ஆசீர்வாதங்களுடன் யுத்த உபகரணத்தின் புதிய மாஸ்டர் ஜெனரலாக முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமையைப் பொறுப்பேற்றார். பின்னர், இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினருடன் புதிய மாஸ்டர் ஜெனரல் கலந்துரையாடினார்.

மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்த்தன, புதிய நியமனம் பெறுவதற்கு முன்னர், கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 57ஆவது படை பிரிவில் கட்டளைத் தளபதியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment