காங்கேசன்துறையிலிருந்து பருத்தித்துறை வரையிலான ஏபீ 21 வீதி 27 வருடங்களுக்கு பின்னர் இன்று காலை 8.30 மணிக்கு பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த வீதியை பொது மக்களின் பாவனைக்காக மீண்டும் திறப்பது குறித்து அறிவித்திருந்தார்.
1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து ஏபீ 21 பிரிவுக்குட்பட்ட இந்த வீதி மூடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திறக்கப்பட்டதனால் இந்த பகுதியில் தாம் சென்றடைய வேண்டிய இடத்தை அடைவதற்கு இருந்துவந்த சுமார் 50 கிலோமீற்றர் தூரம் குறைந்துள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் ஜனாதிபதியும் சுட்டிக்காட்டியுள்ளார். காணாமல் போனோர் தொடர்பாக நீண்ட காலமாக நிலவி வரும் பொது மக்களின் குரல் குறித்தும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். இந்த விடயத்தில் இது தொடர்பில் நீதியை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
காணாமல் போனோர் குடும்பத்தில் சேமநலத்திற்காக மேற்கொள்ளப்பட்டவேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவர்களின் கோரிக்கைக்கு அமைவாக தேவையான பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு எத்தகைய சந்தர்ப்பத்திலும் தயார் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment