அமெரிக்காவில் சுற்றுலா சென்ற குடியரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்றி சென்ற ரயில் ட்ரக்குடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் மேற்கு வர்ஜினியா மாநிலத்திற்கு சார்லோட்டஸ்வில்லி என்ற நகரை கடந்து சென்று கொண்டிருக்கும் போது ரயில் கடவையை கடக்க முயற்சி செய்த குப்பை லொறி ஒன்றியுடன் மோதி விபத்திற்குள்ளானதில் லொறி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் லொறியில் இருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உறுப்பினர்களுக்கு எதுவித பாதிப்பும் இல்லையெனவும் சிறிது நேரத்திற்கு பிறகு ரயில் பயணத்தை குடியரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தனர் என அந் நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சார்லோட்டஸ்வில்லி ரயில்வே பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment