கம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் இன்று (06) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த கோரளகே நெவில் எனும் 65 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிசார் தெரிவித்தனர்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை தேடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment