மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Sunday, February 4, 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கையில் 70ஆவது சுதந்திர தினம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் நீத்த போர் வீரர்களுக்காக மரியாதை செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்கள், பொலிஸ், மற்றும் கலாசார அணியினரின் அணிவகுப்பு மரியாதையுடன் மாவட்ட அரசாங்க அதிபரது சுதந்திரதின உரை இடம்பெற்றது. ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்புதல் என்ற தொனிப்பொருளுக்கமைவாக யோகா பயிற்சிக் கண்காட்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திணைக்கங்களின் தலைவர்கள், முப்படைகளினையும் சேர்ந்த உயர் அதிகாரிகள், படைவீரர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment