யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ரெஜினோட்குரே பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
நாட்டிற்காக உயிர்நீத்த போர்வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. முப்படையினரின் அணிவகுப்பும், சமய கலாசாரங்களை அடையாளப்படுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அரச அதிகாரிகள், முப்படைவீரர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment