இஸ்லாமபாத்தில் இலங்கை உணவு விழா - News View

About Us

About Us

Breaking

Thursday, February 1, 2018

இஸ்லாமபாத்தில் இலங்கை உணவு விழா

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இலங்கை உணவு விழா எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகின்றது. பாகிஸ்தானிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா இம்மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் இருதினங்களாக இஸ்லாமபாத் மறியெற் ஹோட்டலில் [Marriott Hotel] நடைபெறவுள்ளது.

இலங்கையின் கலாச்சார உணவுவகைகளை பிரபல்யப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இலங்கையின் தலைமை சமையலாளர் செய்க் டாவூட் முகமட் சப்றாஸ் இஸ்லாமபாத்திலுள்ள மறியெற் ஹோட்டல் தலைமை சமையலாளர்களுடன் இணைந்து உணவுத்தயாரிப்பில் ஈடுபடவுள்ளார்.

No comments:

Post a Comment