முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் தந்தை, மகள் படுகாயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 1, 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் தந்தை, மகள் படுகாயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவின் வாகனத்துடன் மோட்டார் சைக்களொன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் வவுனியா - கனகராயன்குளம், புதுக்குளம் சந்தியில் நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து யாழில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, திரும்பி கொழும்பு நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, அவரின் பாதுகாப்பிற்காக வந்த கார் ஒன்று புதுக்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவத்தில் அலெக்ஸ் முகுந்தன் (வயது 43) மற்றும் மதுலிதி (வயது 16) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த தந்தையும், மகளும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் மகள் மதுலிதி மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment