சுதந்திர தின கிரிக்கட் சமர்..!! - News View

About Us

About Us

Breaking

Sunday, February 4, 2018

சுதந்திர தின கிரிக்கட் சமர்..!!

எமது இலங்கைத் திருநாட்டின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பால்கன் விளையாட்டுக்கழகம் நடாத்திய பால்கன் வருடாந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று 04.02.2018 காலை கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அணியின் சிரேஸ்ட வீரரும் அணியின் தலைவருமான யு.கே. லாபிர் அவர்களின் வழி காட்டுதலின் பெயரில் இடம்பெற்ற மேற்படி சுற்றுப் போட்டி யின் இறுதிப்போட்டியில் லீக் போட்டிகளில் திறமை காட்டிய பால்கன் சூப்பர் கிங்ஸ் அணியும் பால்கன் டைகர் அணியினரும் தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பால்கன் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் நைசர் அவர்கள் காமில் தலைமையிலான பால்கன் டைகர் அணியினரை துடுப்பெடுத்தாட பணித்தார். நிருணயிக்கப்பட ஆறு ஓவர்கள் முடிவில் பால்கன் டைகர் அணியினர் 06 விக்கடுகளை இழந்து வெற்றி இலக்காக 64 ஓட்டங்களை எதிரணிக்கு தீர்மானித்தனர். 

டைகர் அணியின் சார்பாக அதன் வீரர்கள் சர்ஜூன் மற்றும் அஸ்லம் ஆகியோர் சிறப்பாக ஓட்டங்கள் பெற்று அணியை ஸ்த்திரப் படுத்தினார்கள். பதிலுக்கு துடுப்பாடிய சூப்பர் கிங்ஸ் அணியினர் டைகர் அணியின் பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் நிருணயிக்கப்பட்ட ஆறு ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 37 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர். இதன் பிரகாரம் டைகர் அணியினர் 27 ஒட்டங் களால் வெற்றியை சுவீகரித்துக் கொண்டனர்.
டைகர் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரையில் பைரூஸ், அஸ்லம், காமில், ரிஸ்பின் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்கள். ஆட்ட நாயகன் விருதினை சர்ஜுன் மற்றும் தொடர் நாயகன் விருதினை இக்காசும் பெற்றுக் கொண்டனர்.

வெற்றி பெற்ற பால்கன் டைகர் அணிக்காக வெற்றிக் கிண்ணமும் பணப் பரிசில்களும் ஏற்பட்டுக் குழுவினரால் வழங்கி கௌவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment