8 வது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஹஜந்திகா அபேரத்ன தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இந்த போட்டி நடைபெற்றது.
ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வென்றுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இலங்கை இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 3 வது சந்தர்ப்பமாகும். இம்முறை ஒரு தங்கப் பதக்கத்தையும், 3 வெண்கலப் பதக்கத்தையும் இலங்கை வென்றுள்ளது.
நீளம் பாய்தல் போட்டியில் ஜனக பிரசாத் விமலசிறியும், 800 மீற்றர்ஓட்டப் போட்டியில் நிமாலி லியனாரச்சியும், 400 மீற்றர் ஓட்டத்தில் உபமாலிகா ரத்னகுமாரியும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment