புதன்­கி­ழமை நள்­ளி­ர­வுடன் பிர­ச்சார பணிகள் நிறைவு - News View

About Us

About Us

Breaking

Monday, February 5, 2018

புதன்­கி­ழமை நள்­ளி­ர­வுடன் பிர­ச்சார பணிகள் நிறைவு

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி ­மன்றத் தேர்­த­லுக்­கான பிர­சார பணிகள் யாவும் நாளை மறு­தினம் புதன்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­முதல் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் பிர­தான அர­சியல் கட்­சி­களின் இறுதிக் கட்ட பிர­சாரப் பணிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. தேர்­த­லுக்கு இன்னும் ஒரு­சில தினங்­களே எஞ்­சி­யுள்ள நிலையில் பிர­தான கட்சிகள் கடும் பிர­சார செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளன. 

அந்த வகையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் இறுதிப் பிர­சாரக் கூட்டம் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ள­துடன் ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சியின் இறுதிப் பிர­சாரக் கூட்டம் பொல­ன­று­வையில் நடைபெறவுள்­ளது. 

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் இறுதி தேர்தல் பிர­சாரக் கூட்டம் ஹோமா­க­மவில் நடை­பெ­ற­வுள்­ளது. 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ ஆகியோர் வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் பிர­சாரப் பணி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் மனோ­ க­ணேசன், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் ஆறு­முகன் தொண்­டமான், முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்­ளிட்ட அனைத்து அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் தீவிரப் பிர­சாரப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ளனர். 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் 10 ஆம் திகதி சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள நிலையில் தேர்தல் விதி­முறைப்படி நாளை மறுதினம் 07 ஆம் திகதி நள்­ளி­ரவு 12 மணி­யுடன் தேர்தல் பிர­சாரப் பணிகள் அனைத்தும் முடி­வுக்கு வர­வேண்டும். 

இம்­முறை உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­த­லா­னது கலப்பு முறை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது. அதா­வது தொகுதி மூலம் 60 வீத­மான உறுப்பினர்­களும் விகி­தா­சாரம் மூலம் 40 வீத­மான உறுப்­பி­னர்­களும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். மேலும் விருப்பு வாக்கு முறைமை இந்த தேர்தல் முறையில் இல்லை என்பதுடன் பெண்­க­ளுக்­கான இட­ஓ­துக்­கீடு 25 வீத­மாக உறுதிப்படுத்­தப்­பட்­டுள்ளது.

தேர்­தலில் 50 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட வேட்­பா­ளர்கள் அர­சியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக களமிறங்கியுள்ளனர். தற்­போ­தைய நிலை­மையில் நாட்டில் 341 உள்ளூ­ராட்­சி ­மன்­றங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த 341 உள்ளூராட்சி மன்­றங்­க­ளுக்கு எண்­ணா­யி­ரத்து முன்­னூற்று ஐம்பத்தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர். 

மொத்­த­மாக இரு­நூற்று எழு­பத்­தாறு பிர­தேச சபை­களும், 24 மாந­கர சபை­களும், நாற்­பத்­தொரு நக­ர­ச­பை­க­ளு­மாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் புதிய தேர்தல் முறைப்­படி இம்­முறை உள்ளூராட்சி மன்றத்  தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. எதிர்­வரும் 10 ஆம் திகதி சனிக்கி­ழமை நாட­ளா­விய ரீதியில் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் வாக்­க­ளிப்பு நடை­பெறும். சனிக்­கி­ழமை காலை ஏழு மணிமுதல் மாலை 4 மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபெறும். 

இறுதியாக விகிதாசார முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாட்டில் 335 உள்ளூராட்சி மன்றங்கள் இருந்ததுடன் அம்மன்றங்களுக்கு நான்காயிரத்து நானூற்று எண்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment