உள்ளுராட்சி மன்றங்களினால் பொதுமக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள், பொறுப்புக்களை சிறந்த முறையில் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். பொத்துவில் பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களை இன்று (01) சந்தித்து உறையாடும் போதே கிழக்கு மாகாண ஆளுநர் இதனை தெரிவித்தார்.
தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை யாருடைய தவறான பயமுறுத்தளுக்கும் வேண்டுகோளுக்கும் அடி பணிந்து செய்ய வேண்டாமெெனவும், பொதுமக்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக உங்களை நோக்கி வரும் போது வருபவர்களின் விபரங்களை ஆவணப்படுத்தி அலுவலகத்தில் வைப்பதுடன் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது பற்றியும் பிரதேச சபை செயலாளர்கள் ஆராய வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இதேவேளை பொத்துவில் பஸ் தரிப்பிடம், பொது விளையாட்டு மைதானம், பொதுச்சந்தை ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டதுடன் பஸ் தரிப்பிடத்தை புதிய இடத்தில் நவீன மயப்படுத்த நிதியுதவினை வழங்குவதாகவும் ஆளுநர் உறுதியளித்தார்.
அப்துல்சலாம் யாசீம்
No comments:
Post a Comment