இளவரசர் எட்வர்ட் இளவரசியும் கண்டிக்கு விஜயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 1, 2018

இளவரசர் எட்வர்ட் இளவரசியும் கண்டிக்கு விஜயம்

இலங்கையின் 70ஆவது தேசிய சுதந்திர தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசியும் [Prince Edward, Earl of Wessex] நேற்றை தினம் கண்டிக்கு விஜயம் செய்தனர். கண்டி பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் விமானத்தின் மூலம் இவர்கள் வந்திறங்கினர். இவர்களை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பாரம்பரிய சம்பிரதாயத்திற்கு அமைவாக வெற்றிலை வழங்கி வரவேற்றார். 
இவர்கள் கண்டி தலதா மாளிகைக்கும் விஜயம் செய்தனர் அங்கு இவர்களை தியவதன நிலம பிரதீப் நிலங்கா தேல வரவேற்றார். பிரிட்டிஷ் நிருவாகக் காலப்பகுதியில் தலதா மாளிகைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட புனித போல் தேவாலயத்திற்கும் இவர்கள் சென்றனர். அங்கு இவர்களை குருநாகல் மாவட்ட பேராயர் கீர்த்தி சிரி பெர்ணான்டோ ஆண்டகை வரவேற்றார். அங்கு இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசியும் மரக்கன்று ஒன்ரையும் நாட்டினர்.
கண்டி திரித்துவக்கல்லூரிக்கும் இவர்கள் விஜயம் செய்தனர். அதிபர் அன்ரூ ப்வ்லர் வோட் (Anrew Fowler Watt) தலைமையில் வரவேற்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன்பின்னர் மாணவர்களுடன் இவர்கள் உரையாடினர். திரித்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தை இளவரசர் எட்வர்ட் இளவரசியும் [Prince Edward, Earl of Wessex திறந்து வைத்தனர்.
கண்டி மகளீர் உயர்நிலை பாடசாலைக்கும் சென்றனர். மாணவர் பிரதிநிதிகளுடன் பகல் உணவு விருந்துபசாரத்திலும் பங்குகொண்டனர். இதன் பின்னர் பேராதெனிய பூங்காவிற்கும் சென்றனர். அங்கு மரக்கன்று ஒன்றையும் நாட்டினர். 

No comments:

Post a Comment