இலங்கையில் 70ஆவது சுதந்திர தின நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Sunday, February 4, 2018

இலங்கையில் 70ஆவது சுதந்திர தின நிகழ்வு

"ஒரே தேசம்" என்ற கருப்பொருளின் கீழ் 70வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (04) முற்பகல் காலிமுகத் திடலில் இடம்பெற்றது.

பிரித்தானிய அரச குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி ஷொபி இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர். உலக நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அரச பிரதிநிதிகள் பலரும் பங்கு பற்றினர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர், அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment