70 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 1, 2018

70 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

எதிர்வரும் சனிக்கிழமை (04) கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின வைபத்தை முன்னிட்டு, காலி முகத்திடலை அண்டிய பகுதிகளில் சில வீதிகள் மூடப்படவுள்ளதோடு, அதற்காக மாற்று போக்குவரத்து திட்டமொன்றை போக்குவரத்து பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி முன்னிலையில் காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள வைபவம் மற்றும் அணிவகுப்பு காரணமாக பின்வரும் வீதிகள் மூடப்படவுள்ளன என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

மு.ப. 5.00 - நண்பகல் 12.00 வரை
01. காலி வீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து பழைய பாராளுமன்ற சுற்று வட்டம் வரை

02. சைத்திய வீதி

மு.ப. 7.00 - நண்பகல் 12.00 வரை
03. கொள்ளுபிட்டி சந்தி ஊடாக காலி முகத்திடல் சுற்றுவட்டம் நோக்கி நுழைதல் (குடியிருப்பாளர்களுக்கு அனுமதி)

04. கொள்ளுபிட்டி புனித மைக்கல் சுற்றுவட்டம் ஊடாக காலி வீதி நோக்கி நுழைதல் (குடியிருப்பாளர்களுக்கு அனுமதி)

05. ரொட்டுண்டா சுற்றுவட்டம் ஊடாக காலி வீதி நோக்கி நுழைதல் (குடியிருப்பாளர்களுக்கு அனுமதி)

06. செரமிக் சநதி ஊடாக (லோட்டஸ் வீதி) பழைய பாராளுமன்றம் நோக்கி நுழைதல்

07. யோர்க் வீதி ஊடாக இலங்கை வங்கி வீதி நோக்கி (அலுவலக பணியாளர்களுக்கு அனுமதி)

08. சீனோர் சந்தி ஊடாக (கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலிருந்து) C.T.O. சந்தி நோக்கி நுழைதல் (அலுவலக பணியாளர்களுக்கு அனுமதி)

09. கோட்டை C.T.O. சந்தி ஊடாக செரமிக் சந்தி நோக்கி நுழைதல் (அலுவலக பணியாளர்களுக்கு அனுமதி)

10. மாக்கான் மாக்கார் வீதி, உத்தரானந்த வீதி சந்தி நோக்கி காலி முகத்திடல் சுற்றுவட்டம் நோக்கி நுழைதல் (அலுவலக பணியாளர்களுக்கு அனுமதி)

மு.ப. 8.00 - நண்பகல்12.00 வரை மூடப்படும் வீதிகள்
11. காமினி சுற்றுவட்டம் ஊடாக டி.ஆர். விஜேவர்தன வீதியில் நுழைதல் (அலுவலக பணியாளர்களுக்கு அனுமதி)

12. கொம்பனி வீதி பொலிஸ் சுற்றுவட்டம் ஊடாக லேக் ஹவுஸ் சந்தி


காலிவீதி ஊடாக கொழும்பு நோக்கி மற்றும் கொழும்பிலிருந்து செல்லும் பார வாகனங்கள்
  • டப்ளியூ.ஏ. சில்வா மாவத்தை வழியாக பழைய ஹெவலொக் வீதி, மாயா சுற்றுவட்டம், ஹெவலொக் வீதி, திம்பிரிகஸ்யாக வீதி, பேஸ்லைன் வீதி வழியாக கொழும்பினுள் நுழைய முடியும்.
  • காலி வீதி வழியாக கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் மேற்குறிப்பிட்ட பாதை வழியாக பயணித்து காலி வீதி வழியாக கொழும்பிலிருந்து வெளியேற முடியும்.
காலி வீதி வழியாக கொழும்பினுள் நுழையும் மற்றும் வெளியேறும் பஸ்கள், இலகுரக வாகனங்கள்
  • காலி வீதி வழியாக பகத்தலை வீதி, ஆர்.ஏ.டி. மெல் மாவத்தை, JOC சந்தி, கிளாஸ் ஹவுஸ் சந்தி, நந்தா மோட்டார்ஸ், ஹோட்டன் சுற்றுவட்டம், சொய்சா சுற்றுவட்டம், டீன்ஸ் வீதி, தொழில்நுட்பக் கல்லூரி சந்தி (டெக்னிகல் சந்தி)
  • மு.ப. 9.00 மணி முதல் கொள்ளுபிட்டி சந்தி வழியாக பித்தளை சந்தி, கொம்பனி வீதி ஊடாக பயணிக்க இடமளிக்கப்படும்.
காலி வீதி வழியாக கொழும்பிலிருந்து வெளியேறும் பஸ்கள், இலகுரக வாகனங்கள்
  • ஒல்கட் மாவத்தை, டெக்னிகல் சந்தி, மருதானை பால சந்தி, டி.பி. ஜாயா வீதி, இப்பன்வல சந்தி, யூனியன் பிரதேசம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எப்.ஆர். சேனாநாயக்க வீதி, கன்னங்கர மாவத்தை, நந்தா மோட்டார்ஸ் சந்தி, சுதந்திர சதுக்க சுற்றுவட்டம், ரீட் வீதி, தும்முல்ல சுற்றுவட்டம், பௌத்தாலோக வீதி, ஆர்.ஏ.டி. மெல் மாவத்தை, காலி வீதி ஊடாக வெளியேற முடியும்.

No comments:

Post a Comment