அதிபர் முழந்தாளிட்ட சம்பவத்திற்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 31, 2018

அதிபர் முழந்தாளிட்ட சம்பவத்திற்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிராகவும், அதற்கு காரணமான ஊவா மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியும் இன்று (31) ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஹட்டன் மல்லியப்பு சுற்றுவட்டத்திற்கு முன்பாக மதியம் 12.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், உதயகுமார், ஆர்.இராஜாராம், சரஸ்வதி சிவகுரு என பலரும் பொது மக்களுடன் கலந்து கொண்டனர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டகாரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாதைகளை ஏந்தி, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியாறு சுமார் ஒரு மணித்தியாலயம் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதேவேளை ஹட்டன் பொலிஸாரால் வீதியை மறித்து போராட்டத்தை நடத்துவதற்கும், ஊர்வலம் செய்வதற்கும் எதிர்த்து ஹட்டன் நீதிமன்றத்தின் ஊடாக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment