பிரதமர் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட 210 பேர் மீது பொருளாதார தடை விதிப்போம் அமெரிக்கா எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 31, 2018

பிரதமர் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட 210 பேர் மீது பொருளாதார தடை விதிப்போம் அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட 210 பேர் மீது பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ரஷ்ய உளவுத் துறை சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டி ரஷ்யாவைச் சேர்ந்த 210 பேரின் பட்டியலை அமெரிக்க அரசு நேற்றுமுன்தினம் வெளியிட்டது. ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ், 22 அமைச்சர்கள், ரஷ்ய அதிபர் மாளிகையின் தலைமை நிர்வாகி அன்டன் வைனோ, 100 தொழிலதிபர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இவர்கள் அனைவரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இப்போதைக்கு இவர்கள் மீது எவ்வித பொருளாதார தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 210 பேரும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இவர்கள் மீது வருங்காலத்தில் பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியபோது, “வரும் மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நேரத்தில் அதிபர் விளாடிமிர் புதின், முன்னணி தொழிலதிபர்கள் இடையே பிளவை ஏற்படுத்த அமெரிக்க அரசு முயற்சி செய்கிறது” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment