இலங்கை அணிக்கெதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இதில் கொல்கத்தாவில் இடம்பெற்ற முதலாவது போட்டி வெற்றி தோலிவியின்றி சமநிலையில் முடிவடைந்தது. இரு அணிகளுக்குமிடையிலான நாக்பூரில் இடம்பெற்ற 2ஆவது போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலைபெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3ஆவதும் இறுதியுமான போட்டி இன்று டில்லியில் ஆரம்பமாகின்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment