அலிஸாஹிர் மௌலானா மீண்டும் அனுதாப அலையை திரட்டுவதற்கான அரசியல் நாடகத்தைத் தொடங்கியுள்ளார். - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 6, 2017

அலிஸாஹிர் மௌலானா மீண்டும் அனுதாப அலையை திரட்டுவதற்கான அரசியல் நாடகத்தைத் தொடங்கியுள்ளார்.



கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் தன்னை செருப்பால் அடிக்க வந்தார் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா கூறித்திரிவது மக்களிடம் அனுதாப அலையை திரட்டுவதற்கான அரசியல் நாடகமே அன்றி வேறில்லை என ஏறாவூர் நகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எச். அப்துல் கபூர் தெரிவித்தார்.

அலிஸாஹிர் மௌலானா முன்னாள் முதலமைச்சரால் தாக்கப்பட்டதாக ஏறாவூரில் பரப்பப்பட்ட வதந்தி குறித்த உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் முகமாக அலிஸாஹிர் மௌலானாவின் முன்னாள் ஆதரவாளர்களான நகர சபை உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் திங்கட்கிழமை 04.12.2017 பிற்பகல் ஏறாவூரில் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அப்துல் கபூர், நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா கடந்த தேர்தல் காலங்களிலும் தனக்கு அரசியல் தோல்வி ஏற்படும் எனப் பயந்திருந்த வேளைகளில் அதற்கு முகம் கொடுக்க முடியாத நிலைமையில் மக்களிடம் அனுதாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான நம்ப முடியாத பல வதந்திகளைப் பரப்பி இருக்கின்றார் என்பது அவரோடு கூடவே இருந்து செயற்பட்டவர்கள் என்ற ரீதியில் உறுதியாகக் கூறுகின்றோம்.

1994ஆம் ஆண்டும் தேர்தல் காலத்தில் இவ்வாறு தான் தாக்கப்பட்டு காயம் ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலிலும் இதுபோன்று நடந்திருக்கிறது. நாங்கள் அவரைத் தாக்கியதால் காயமேற்பட்டதாகக் கூறி ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் போய் சிகிச்சைக்காக அமர்ந்து கொண்டார்.

இந்த விடயத்தில் எனக்கு அவமானம் ஏற்படுத்தப்பட்டதாக 250 இலட்சk; ரூபாய் மான நஸ்ட ஈடு கோரி நான் வழக்குத் தாக்கல் செய்திருந்தேன் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அவர் முன்பிருந்த கட்சிகளில் இருந்து மாறி ஸ்ரீலமுகா கட்சிக்குள் வந்து விட்டார் என்ற காரணத்தினால் சமூக ஒற்றுமை கருதி அவர் மீதான கோபதாபங்களை மறந்தவர்களாக நாம் ஒன்றுபட்டிருக்கும்போது இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் கூறி வதந்தி பரப்பி, இந்த சமூகத்தை மீண்டும் குழப்ப முயற்சிக்கின்றார்.

கடந்த பொதுத் தேர்தலில் இவரை வெல்ல வைப்பதற்காக நாம் நம்மைத் தியாகம் செய்து பாடுபட்டோம். தலைவர் றவூப் ஹக்கீமிடம் இவருக்காக கண்ணீர் விட்டு அழுது அவர் சார்பாக வாதாடினோம். இவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக தேசியத் தலைவரோடு கூட மிகக் கடுமையாக முரண்பட்டுள்ளேன்.

ஏறாவூரில் தனக்கு குடியிருக்க வீடில்லை அந்தளவுக்கு எளிமையான அரசியல்வாதி என்று கூறிக் கொண்டே இவர் மக்களது அனுதாப அலையில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார். இணக்கப்பhட்டுக்கு வராமல் பிணங்கிக் கொண்டு அரசியல் நடாத்துவதிலேயே எப்போதும் ஆர்வமாக உள்ள ஒரு அரசியல்வாதி அவர்.

இப்படியாக தொடர்ந்தேர்ச்சையாக இந்த ஊரையும் மக்களையும் அலிஸாஹிர் மௌலானா ஏமாற்றி வருவது புத்திசாலித்தனமல்ல. இவருடைய பசப்பு வார்த்தைகளைக் கேட்டு ஒரு சில போலி முகநூல்காரர்கள் அனுதாப அலை திரட்ட முயற்சிக்கிறார்கள்.

இது குறித்து ஊர் மக்களும் ஸ்ரீலமுகா ஆதரவாளர்களும் ஏமாறத் தேவையில்லை.” அதேவேளை, அவதூறு பரப்பி மக்களைக் குழப்புபவர்களுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லலையேல் முன்னாள் முதலமைச்சருக்கு வழங்கும் ஆதரவையும் நாம் விலக்கிக் கொள்ள நேரிடும்” என்றார்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

No comments:

Post a Comment