நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என். முபீன் அவர்களின் முயற்சி மற்றும் வேண்டுகோளின் பேரில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களின் பதினேழு இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் கொங்கிறீற்று வீதியாக அமைக்கப்படவுள்ள பாம் வீதியின் இரண்டாம் குறுக்கு வீதி தொடர்பில் அப்பகுதி மக்களுடன் வீதி அமைத்தல் மற்றும் அதனுடன் தொடர்பிலான விடயங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் 05.12.2017 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் அப்பிரதேச முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டதோடு இதன்போது வீதியோடு தொடர்புடைய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
ஆதிப் அஹமட்
No comments:
Post a Comment